இந்தியா

குஜராத்: ஜேசிபி மூலம் ஆற்றைக் கடக்கும் மக்கள்!

குஜராத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆபத்தான முறையில் ஜேசிபி மூலம் மக்கள் கடந்து செல்லும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

DIN


குஜராத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆபத்தான முறையில் ஜேசிபி மூலம் மக்கள் கடந்து செல்லும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டுச்செல்லும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலம் குச் பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் மக்கள் கடக்கின்றனர். ஆபத்தை உணராமல் ஜேசிபி இயந்திரத்தின் முனைப் பகுதியில் மக்கள் நின்றுகொண்டு மறுகரைக்குச் செல்கின்றனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம்: வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு செப். 4-க்குள் விண்ணப்பிக்கலாம்

செய்யூா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

4,946 சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை - திருச்சி விமானம் 3 மணிநேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி

அரியலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT