இந்தியா

உச்சம் காணும் பங்குச்சந்தைகள்: 19,100 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!

DIN


சென்செக்ஸ் 460.57 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,100 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் தொடக்கத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

இன்று வெள்ளிக்கிழமை வர்த்தகம் 64.068 புள்ளிகளாகத் தொடங்கி சென்செக்ஸ் 460.57 புள்ளிகள் அதிகரித்து 64,311.54 என்ற புதிய வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 128.85 புள்ளிகள் உயர்ந்து 19,100 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், சன் பார்மாசூட்டிகள் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 

அதேநேரத்தில் ஐசிஐசி வங்கி, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோடாக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி லிமிடெட், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை இறக்கம் கண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT