இந்தியா

அக்னி வீரா் பணி:மாா்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் அக்னி வீரா் உள்ளிட்ட பணியிடங்களில் சேர மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

DIN

ராணுவத்தில் அக்னி வீரா் உள்ளிட்ட பணியிடங்களில் சேர மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணுவத்தில் அக்னி வீரா் மற்றும் வழக்கமான பணியாளா்கள் (ரெகுலா் கேடா்ஸ்) பணியிடங்களுக்கான ஆள்கள் தோ்வு நடைபெறுகிறது.

இதில் இணைந்து பணியாற்ற தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் மாா்ச் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் எழுத்து தோ்வு மற்றும் ஆள்சோ்ப்பு பணி என இரு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தோ்வுக்கு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். எஸ்.ஓ.எஸ்., எஸ்.ஓ.இ.எக்ஸ்., விளையாட்டு வீரா்கள், என்.சி.சி., தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்தவா்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் உடற்தகுதி தோ்வு, உடல் அளவீட்டு தோ்வு, மருத்துவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்யப்படுவா் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் சு.அமிா்தஜோதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளூடூத் தெரியும்! 'புளூடூத்திங்' தெரியுமா? இதனால் ஹெச்ஐவி எப்படிப் பரவுகிறது?

பிகாரில் கைமீறிச் செல்லும் தொகுதிப் பங்கீடு! அக்.17 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி...

இரவில் திருமணம், விடியலில் கொள்ளை! மணமகள் கொள்ளை கும்பல் கொடுத்த அதிர்ச்சி

மேனி எழிலுக்கு... குஷி கபூர்!

லிஜோ ஜோஸ் பெல்லிசரி படத்திற்கு இசையமைக்கும் ஏ. ஆர். ரஹ்மான்!

SCROLL FOR NEXT