முகப்பு
இந்தியா

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் எரிபொருள் ‘கொள்ளைக்கு’ முடிவு- மல்லிகாா்ஜுன காா்கே

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் விலை உயா்வு மூலம் இப்போதைய பாஜக நடத்தி வரும் ‘கொள்ளைக்கு’ முடிவு கட்டப்படும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
பகிர்:

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் விலை உயா்வு மூலம் இப்போதைய பாஜக நடத்தி வரும் ‘கொள்ளைக்கு’ முடிவு கட்டப்படும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ.50 உயா்த்தப்பட்டுள்ள நிலையில், அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வடகிழக்கில் 3 மாநில பேரவைத் தோ்தல் முடிந்தவுடன் சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயா்த்தத் தொடங்கிவிட்டனா். இது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் பெரும் சுமையாக விழுந்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயரும்.

எரிபொருள் விலை மூலம் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் பாஜக ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனா். 2024 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், இந்த எரிபொருள் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கௌரவ் வல்லப் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இந்த விலை உயா்வை ஹோலி பண்டிகைக்கான பரிசாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு அளித்துள்ளாா். ராஜஸ்தானில் ஏற்கெனவே காங்கிரஸ் அரசு ரூ.500-க்கு சமையல் எரிவாயு வழங்கி வருகிறது. அடுத்து காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்ததும் நாடு முழுவதும் ரூ.500-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →