சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு 
இந்தியா

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: ஸ்டென்ட் பொருத்தி அறுவைசிகிச்சை

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

PTI

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆர்யா பட நடிகை சுஷ்மிதா சென் இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து, தனது இதயத்தில் ஸ்டென்ட் பொறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டகிராமில், உங்கள் இதயத்தை மகிழ்ச்சியுடனும் ஊக்கத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது உங்களுக்கு எப்போது தேவைப்படுமோ அப்பொழுது உங்களுடன் துணை நிற்கும். (எனது தந்தை சென்சுபிரின் அற்புதமான வார்த்தைகள்)

ஒரு சில நாள்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது.. ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளது.. மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்.. எனக்கு மிகப்பெரியஇதயம் இருக்கிறது என்பதை.

உரிய நேரத்தில் உதவிய ஏராளமானோருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது வேறொரு பதிவில் இடம்பெறும் என்றும் சுஷ்மிதா பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT