ஆமதாபாத்: விலை வீழ்ச்சியால், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விளைவித்த விவசாயிகள், சந்தைக்கு கொண்டு வந்த மூட்டைகளை விற்று சில நூறுகளைப் பெறும் போது கண் கலங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மகுவா மற்றும் பாவ்நகர் கிடங்குகளில் உருளைக்கிழங்கு, அதன் தரத்துக்கு ஏற்பட கிலோ ரூ.3 முதல் ரூ.10 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வெங்காயம் கிலோ ரூ.6 முதல் 9 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இதையும் படிக்க.. காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.10 முதல் 20 என்ற நிலையில் உருளைக்கிழங்கு இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்த அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகளுக்கு வேதனையை அளித்துள்ளது.
இந்த ஆண்டு ஒரு ஹெக்டேருக்கு விளைந்த உருளைக்கிழங்கின் வரத்து அதிகமாக இருக்கிறது. எனவே, விலை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், தற்போது விளைவித்த உருளைக்கிழங்குகள் பதப்படுத்தும் கிடங்குகளில் வைக்கப்பட்டு, விலை சற்று உயர்ந்தபிறகு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் சில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. சைபர் குற்றங்களிலும் 'பொன்னான நேரம்' முக்கியம்: மக்களே எச்சரிக்கை
சில வேளைகளில் அதிக விளைச்சலும் விலை வீழ்ச்சிக்கு வித்திட்டுவிடும். அதுதான் தற்போதும் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் உருளை உற்பத்தி குறைந்தது. அதனால் குஜராத்திலிருந்து உருளை அங்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த ஆண்டு உருளை மற்றும் வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்கள் அனைத்திலுமே உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறார்கள் சந்தை நிலவரங்களை அறிந்தவர்கள்.
அடுத்த வாரம் முதல் நிச்சயம் வெங்காயம் வரத்துக் குறைந்து விலை சற்று அதிகரிக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள். குஜராத்தில் விளையும் சிவப்பு நிற வெங்காயம் அங்கிருந்து தில்லி மற்றும் வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படும். மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் விளையும் வெங்காயத்தைத்தான் குஜராத் மக்கள் வாங்குகிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.