முகப்பு
இந்தியா

பெங்களூருவில் மிகப்பெரிய ஆப்பிள் தொழிற்சாலை: ஒரு லட்சம் பேருக்கு வேலை!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் தொழிற்சாலை அமையவுள்ளது. 

Updated On : 3 மார்ச், 2023 at 5:45 PM
பகிர்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் தொழிற்சாலை அமையவுள்ளது. 

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் தொழிற்சாலை அமையும் என்றும் அதில் ஆப்பிள் போன்கள் தயாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

Advertisement

மேலும் இதன் மூலமாக கர்நாடகத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதற்காக ஐபோன்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் தொழிற்சாலைகளில் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. 

சமீபத்தில் ஓசூரிலும் ஆப்பிள் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.