இந்தியா

குற்றவாளிகளை தண்டிப்பதே எங்கள் நோக்கம்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

DIN

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ வீட்டில் ரூ.6 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிப்பதே எங்கள் நோக்கம் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

பாஜக எம்எல்ஏ மதல் விருப்பாக்சப்பாவின் மகன் பிரசாந்த். இவரது வீட்டில் வியாழக்கிழமை லோக் ஆயுக்த அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

சுமார் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பிரசாந்த் மாதலையும் கைது செய்தனர். இச்சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாது, லோக்ஆயுக்த சுதந்திரமானது, குற்றவாளிகளை தண்டிப்பதே எங்கள் நோக்கம். 

அனைத்து விவரங்களும் லோக் ஆயுக்தவிடம் உள்ளன, அது யாருடைய பணம், அது எங்கிருந்து வருகிறது, எல்லாம் வெளியே வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT