கஸ்பா இடைத்தேர்தல் வெறும் முன்னோட்டம் மட்டுமே: சஞ்சய் ரௌத்
கஸ்பா பெத் தொகுதி இடைத்தேர்தலில் மகா விகாஸ் அகாடி பெற்றுள்ள வெற்றி வெறும் முன்னோட்டம் எனவும், மகா விகாஸினால் 200 பேரவைத் தொதிகள் மற்றும் 40 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.
கஸ்பா பெத் தொகுதி இடைத்தேர்தலில் மகா விகாஸ் அகாடி பெற்றுள்ள வெற்றி வெறும் முன்னோட்டம் எனவும், மகா விகாஸினால் 200 பேரவைத் தொதிகள் மற்றும் 40 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
மகா விகாஸ் அகாடி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டால் இவை சாத்தியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரவீந்திர தங்கேகாரை சந்தித்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள்கள் சிபிஐ காவல்
அப்போது அவர் பேசியதாவது: கஸ்பா பெத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் புத்திசாலிகள். அவர்கள் மகாராஷ்டிராவில் ஆளும் அரசுக்கு மிகப் பெரிய அடியினைக் கொடுத்துள்ளனர். இது வெறும் முன்னோட்டம் தான். மகாராஷ்டிரம் பார்க்க வேண்டியது இன்னும் இருக்கிறது. மகா விகாஸ் அகாடியின் வெற்றி மாநிலத்தின் அரசியல் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. மகா விகாஸ் அகாடி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் 200 பேரவைத் தொதிகள் மற்றும் 40 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்றார்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.