இந்தியா

உத்தரகண்டில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்: மக்கள் அதிர்ச்சி!

உத்தரகண்டின் உத்தரகாசியில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக பேரிடா் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. 

DIN

உத்தரகண்டின் உத்தரகாசியில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக பேரிடா் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை செயலர் ரஞ்சித் சின்ஹா கூறுகையில், 

உத்தரகாசி மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரோா் வனப்பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக பதிவானது. 

இதைத் தொடர்ந்து மூன்றாவது நிலநடுக்கம் காலை 10.00 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக இருந்தது. 

இதன் காரணமாக, வீடுகளில் கதவு, ஜன்னல்கள் அதிர்ந்தன. பாத்திரங்களும் கீழே விழுந்ததால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், பதறியடித்து எழுந்து, வெளியே ஓடிவந்தனர். பீதி காரணமாக மீண்டும் வீடுகளுக்குள் செல்லாமல் காலை வரை தெருக்களிலேயே தஞ்சமடைந்திருந்தனர்.

நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. உத்தரகண்டில் கடந்த இரண்டு மாதங்களில் 12 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

விக்சித் பாரத்: 3 ஆயிரம் இளைஞர்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி!

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொலை! மனித உரிமைக் குழு போராட்டம்!

ஷாகித் கபூரின் ஓ ரோமியோ படத்தின் டிரைலர்!

இருளில் மூழ்கிய கோடிக்கோட்டை சுங்கச்சாவடி! கட்டணமின்றி சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT