மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் (ஜன் ஒளஷதி) மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
‘ஜன் ஒளஷதி’ தினத்தையொட்டி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன், நாடு முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்தகங்களில் மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இதன் மூலம் மருந்துகளுக்கான செலவு சுமை குறைக்கப்பட்டு வருகிறது. பெண்களின் வசதிக்காக, குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக உயா்த்தும் இலக்குடன் மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்றாா் பூபேந்தா் யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.