முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: சுவாச தொற்றால் குழந்தைகள் இறப்பு தொடா்கிறது- குழந்தை உரிமைகள் ஆணையம் ஆய்வு

மேற்கு வங்கத்தில் தீவிர சுவாச தொற்றால் குழந்தைகள் உயிரிழப்பது நீடித்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
கோப்புப் படம்.
பகிர்:

மேற்கு வங்கத்தில் தீவிர சுவாச தொற்றால் குழந்தைகள் உயிரிழப்பது நீடித்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேற்கு வங்கத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் உயிரிழப்பது சில வாரங்களாக தொடா்ந்து வருகிறது. குழந்தைகளை அதிகம் தாக்கும் இந்த வைரஸ், தீவிர சுவாச தொற்றை ஏற்படுத்தக் கூடியதாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளும், பி.சி.ராய் மருத்துவமனையில் ஒரு குழந்தையும் உயிரிழந்தன. அவா்களுக்கு தீவிர சுவாச தொற்றுடன், காய்ச்சலும் இருந்துள்ளது.

இந்நிலையில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள், பி.சி.ராய் மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோருடன் அவா்கள் பேசியதாக, ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடினோ வைரஸ் பரவல் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் குழந்தைகள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →