இந்தியா

சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்!

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா சிறையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

DIN

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா சிறையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல்  மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில், சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு சிறந்த தரமான கல்வி வழங்குவதைக் காட்டிலும் அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையிலடைப்பது மிகவும் எளிதான காரியம். பாஜகவின் பிரச்னை கல்வி சார்ந்த அரசியலே. அவர்கள் தேசத்தினை உருவாக்க நினைக்கிறார்கள், தலைவர்களை அல்ல. கல்வி சார்ந்த அரசியல் என்பது எளிதான காரியமல்ல. அரசியல் ஆதாயத்துக்கான விஷயமும் கிடையாது. இன்று பாஜக ஆட்சியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கும் அரசியல் வெற்றி பெறலாம். ஆனால், எதிர்காலம் கல்வி சார்ந்த அரசியலுக்கானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT