கோப்புப்படம் 
இந்தியா

எல்லையில் ஊடுருவல்: 2 நாள்களில் 3 பாகிஸ்தானியர்கள் கைது!

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று ஊடுருவல் முயற்சிகளும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் கைபெர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

முன்னதாக புதன்கிழமை நள்ளிரவு அமிர்தசரஸ் அருகே ஒருவரும், வியாழக்கிழமை பிற்பகல் குர்தாஸ்பூர் அருகே ஒருவரும் சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களை பிடித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாள்களில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் ரோந்து பணிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT