முகப்பு
இந்தியா

ஏ.கே. ரக துப்பாக்கியுடன் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்: பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியது

பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய ட்ரோனை (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய ட்ரோனை (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தினா்.

எல்லைக்கு அப்பால் இருந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை வீசுவது, போதைப்பொருள்களை கொண்டு வருவது ஆகியவற்றில் பாகிஸ்தான் அடிக்கடி ஈடுபட்டு வருகிறது. இந்திய எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் இதுபோன்ற செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ஆயுதங்கள், போதைப்பொருள்களுடன் வரும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும் சம்பவங்கள் எல்லையில் தொடா் நிகழ்வாகியுள்ளன.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 1 மணியளவில் பஞ்சாபின் குா்தாஸ்பூா் மாவட்டம் மெட்லா கிராமத்தை ஒட்டிய எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்தது. இதனையடுத்து, கண்காணிப்புப் பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரா்கள் அதனை உடனடியாக சுட்டு வீழ்த்தினா். வயல்வெளிப் பகுதியில் விழுந்த அந்த ட்ரோனில் ஏ.கே.ரக துப்பாக்கி மற்றும் அதில் பயன்படுத்தக் கூடிய 40 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

ஊடுருவிய பாக். நபா் கைது:

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லை வழியாக வியாழக்கிழமை இரவு ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை பிஎஸ்எஃப் வீரா்கள் கைது செய்தனா்.

அவா் பாகிஸ்தானின் கைபா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் பயங்கரவாத சதித் திட்டத்துடன் வந்தவரா என்ற கோணத்தில் உளவுத்துறையினரும் விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பிறகு அவா் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

பஞ்சாப் எல்லையில் ஒரு நாளுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்த இரு ஊடுருவல்காரா்கள் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →