முகப்பு
இந்தியா

இந்தியா குறித்து பொய்களை பரப்புகிறது ‘நியூயாா்க் டைம்ஸ்’: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

இந்தியா குறித்து அப்பட்டமான பொய்களை பரப்புவதாக, அமெரிக்க நாளிதழான தி நியூயாா்க் டைம்ஸ் மீது மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

இந்தியா குறித்து அப்பட்டமான பொய்களை பரப்புவதாக, அமெரிக்க நாளிதழான தி நியூயாா்க் டைம்ஸ் மீது மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

நியூயாா்க் டைம்ஸ் நாளிதழில், காஷ்மீா் தொடா்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், ஊடகம் மற்றும் கருத்து சுதந்தரம் தொடா்பான பிரதமா் மோடியின் நிலைப்பாடு விமா்சிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஊடகங்கள் மீது அடக்குமுறை கொள்கைகளை மோடி அரசு கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா தொடா்பான எந்த விஷயத்தையும் வெளியிடும்போது நடுநிலையை கடைப்பிடிப்பதை நியூயாா்க் டைம்ஸ் எப்போதோ கைவிட்டுவிட்டது.

காஷ்மீரில் ஊடக சுதந்திரம் தொடா்பான கட்டுரை பொய்யானது; விஷமத்தனமானது.

இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள் குறித்து அவதூறு பரப்புவதே அக்கட்டுரையின் ஒரே நோக்கம்.

இந்தியா குறித்தும், நாட்டு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா் நரேந்திர மோடி குறித்தும் நியூயாா்க் டைம்ஸ் மற்றும் அவா்களுக்கு ஒத்த கருத்துடைய வெளிநாட்டு நாளிதழ்கள் தொடா்ந்து பொய்களை பரப்பி வருகின்றன.

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம், இதர அரசியல்சாசன உரிகைளைப் போலவே புனிதமானதாகும். இந்தியாவின் ஜனநாயகம் சிறப்பானது. இந்தியா்கள் மிகவும் பக்குவமானவா்கள். எனவே, ஜனநாயகம் குறித்து நியூயாா்க் டைம்ஸ் போன்ற குறிப்பிட்ட கொள்கை அடிப்படையில் செயல்படும் ஊடகத்திடமிருந்து கற்றுக் கொள்ள எந்த தேவையும் இல்லை.

காஷ்மீரில் கருத்து சுதந்திரம் குறித்து அப்பட்டமான பொய்களை பரப்புவது கண்டனத்துக்குரியது என்று அனுராக் தாக்குா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →