மாண்டியா மக்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி: பிரதமர் மோடி
பிரதமர் மோடி, மாண்டியா மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, மாண்டியா மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்க இன்று கர்நாடகம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு மாண்டியா மாவட்டத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சாலையில் இரு புறங்களிலும் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
Advertisement
Advertisement
பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்ந்து பின் தொடர்ந்து சென்ற பிரதமரின் காருக்கு பூக்களைத் தூவி வரவேற்றனர். காரின் கதவருகே நின்றவாரு தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க- ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
இந்த நிலையில் பிரதமர் மோடி, மாண்டியா மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவு செய்து அருமையான வரவேற்புக்கு நன்றி, மாண்டியா எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.