இந்தியா

திருப்பதியில் 2 நாள்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து!

தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் 2 நாள்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN


திருப்பதி: தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் 2 நாள்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு தெலுங்கு ஆண்டு பிறப்பு வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21 ஆம் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

கோயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 

கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், 22 ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்படும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. 

காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது.

மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

கல்வராயன் மலையில் பயங்கரம்: நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT