இந்தியா

விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தவர் மீது வழக்கு

ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

DIN

ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த 10ஆம் தேதி லண்டனிலிருந்து மும்பைக்கு ஏர் இந்திய விமானம் ஒன்று வந்தது. அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரமாகாந்த்(37) என்கிற பயணி தடையை மீறி கழிவறையில் புகைபிடித்தாகக் கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த அவர், விமானத்தின் கதவை திறக்க முயற்சித்ததாகவும், சக பயணிகளிடம் தகராறு செய்ததாகவும் விமான பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து மும்பையின் சஹார் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், ஆனால் அவர் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, மார்ச் 10, 2023 அன்று லண்டன்-மும்பைக்கு இயக்கப்படும் எங்கள் விமானமான ஏஐ130-இல் பயணி ஒருவர், கழிவறையில் புகைப்பிடிப்பதை கண்டோம். 

பலமுறை எச்சரித்த போதிலும், அவர் எங்கள் பேச்சைக் கேட்காமல் ஆக்ரோஷமான முறையில் நடந்துகொண்டார். விமானம் மும்பைக்கு வந்தவுடன் அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து ஒழுங்குமுறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நடந்து வரும் விசாரணைகளுக்கு நாங்கள் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குகிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT