இந்தியா

‘நாட்டு நாட்டு’ பாடல் பல ஆண்டுகள் நினைவில் நிற்கும்: பிரதமர் மோடி

DIN

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரண்டு படக்குழுவினர்களுக்கும் பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை வாழ்த்தி மோடி வெளியிட்ட பதிவில், “எதிர்பார்த்ததுதான். நாட்டு நாட்டு பாடலில் புகழ் உலகளாவியது. பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாரட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவை பாராட்டி, ”கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படம் நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அற்புதமாக எடுத்துரைக்கிறது.” என்று டிவிட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT