இந்தியா

லண்டனில் இந்தியாவை அவமதித்த ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்: ராஜ்நாத் சிங்

லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

DIN

லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

அவையில் உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்தியாவை அவமதித்துப் பேசியுள்ளார். 

அவரது இந்த பேச்சுக்கு அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும். மேலும் பாஜக தலைமையிலான அரசைக் கடுமையாகத் தாக்கி, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து வர்த்தகத்தையும் பணத்தையும் பெறுவதால் இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போதுமான அளவு செய்யவில்லை. 

நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் அந்நிய தேசத்திற்குச் சென்று இந்தியாவை அவமதிப்பது போன்று உள்ளது. இதனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT