இந்தியா

இது எந்த ரயில் நிலையம்? கேட்பது இந்திய ரயில்வேதான்

DIN

இது எந்த ரயில் நிலையம்? கேட்பது இந்திய ரயில்வேதான்
ஒரு ரயில் நிலையத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, அதன் பெயர்ப் பலகைகளை மறைத்துவிட்டு இது எந்த ரயில் நிலையம் என்று இந்திய ரயில்வே கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஒரு பூங்காவைப் போல மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியும் மிகச் சிறந்த தேர் போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவிலேயே, அதற்கான விடையையும் இந்திய ரயில்வே அளித்திருக்கிறது. அதாவது ஹோஸபேடே ஜங்ஷன் என்று பெயர்ப் பலகையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிலில் இணைத்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த ஹோஸபேடே ஜங்ஷன். இது விஜயநகர் ஜங்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது.  ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான ஹம்பி நகருக்குச் செல்வதற்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது இந்த ஹோஸபேடே ரயில் நிலையம்.

ஆகையால், துங்கப்பத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஹம்பி செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயில் நிலையத்தில் இறங்கித்தான் சாலை மார்கமாக ஹம்பி செல்வார்கள். எனவே, இந்த ரயில் நிலையம் ஹம்பியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அழகிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இவ்விடத்தில்தான் புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊர் பழைய நகரின் சுவடுகளோடு கலந்து நிறைந்து உள்ளது. கர்நாடகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் முதல் இடத்தில் ஹம்பி அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT