இந்தியா

மாநிலங்களவையில் ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுக்களுக்கு வாழ்த்து

மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

DIN

மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை வென்றது.

இந்த இரு படங்களின் குழுக்களுக்கு இன்றைய மாநிலங்களவை கூட்டத்தொடரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வென்ற படக்குழுக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியதாவது:

“ஆஸ்கர் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இந்திய கலைஞர்களின் பரந்த திறமை, மகத்தான படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த சாதனைகள் மூலம் உலகளாவிய பாராட்டைப் பிரதிபலிக்கின்றன. நமது உலகளாவிய எழுச்சி மற்றும் அங்கீகாரத்துக்கான மற்றொரு அம்சம் இது.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் கேட்பாரற்று கிடக்கும் மன்னா் உருவம் பொறித்த கல் தூண்

சிவகங்கை நகராட்சியின் முதல் தலைவா் காலமானாா்

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் தீவிர சோதனை

காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவை

சிவகங்கையில் உள்ள நீதிமன்றங்களை மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

SCROLL FOR NEXT