இந்தியா

நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? குடியரசுத் தலைவர் பதில்

DIN

நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கக் கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் மாளிகை பதிலளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022 பிப்ரவரி  8-ஆம் தேதி நீட் தோ்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த மே மாதம் அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து மசோதா குறித்து மத்திய அமைச்சகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடந்த ஜனவரி மாதம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தரப்பில் அவரது மாளிகையில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT