இந்தியா

லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்!

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிராசாத், அவரது மனைவி மற்றும் மகள் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

DIN

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிராசாத், அவரது மனைவி மற்றும் மகள் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடா்பாக லாலு பிராசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ. 600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவரது மகள் எம்.பி. மிசா பாரதி ஆகியோர் இன்று ஆஜராகியுள்ளனர்.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா்.

அதற்கு கைம்மாறாக, வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தமிழ் இனத்துக்கும் சமூக நீதிக்கும் விரோதி திமுக! - Tamilisai Soundararajan

SCROLL FOR NEXT