முகப்பு
இந்தியா

ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 7 வயது சிறுவன் மீட்பு! 

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் உள்ள லேட்டரி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டுசெல்லப்பட்டான் என்று துணைப்பிரிவு நீதிபதி தெரிவித்தார். 

மருத்துவர்கள் தொடர்ந்து சிறுவனைப் பரிசோதித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பார்கள் என்றார்.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சிறுவன் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 43 அடி ஆழத்தில் சிக்கி நிலையில், சிறுவனை மீட்க  ஜேசிபி இயந்திரம் மூலம் அதற்கு இணையான குழி தோண்டப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றில் ஆக்சிஜன் குழாய் செலுத்தப்பட்டு, மீட்புப் பணியாளர்கள் படக்கருவி மூலம் சிறுவனைக் கண்காணித்தனர். சிறுவனைக் கண்காணிக்கும் போது மீட்புக் குழுவினர் அசைவுகளைக் கவனித்ததாகக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.