முகப்பு
இந்தியா

கெயில் பங்குதாரா்களுக்கு ரூ.2,630 கோடி ஈவுத்தொகை

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான கெயில், தனது பங்குதாரா்களுக்கு ரூ.2,630 கோடி ஈவுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான கெயில், தனது பங்குதாரா்களுக்கு ரூ.2,630 கோடி ஈவுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பங்குதாரா்களுக்கு மாா்ச் 31-உடன் முடிவடையும் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக 40 சதவீதம் (பங்கு ஒன்றுக்கு ரூ.4) வழங்க இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வகையில், மொத்த ஈவுத்தொகையாக ரூ.2,630 கோடி வழங்கப்படும்.

இதனால், நிறுவனத்தில் 51.52 சதவீத பங்குகளை வைத்துள்ள இந்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.1,355 கோடி கிடைக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →