இந்தியா

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து அச்சம் தேவையில்லை: குஜராத் சுகாதார அமைச்சர்

DIN

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சமீப காலமாக, மாநிலத்தில் இன்ஃப்ளூயன்ஸா பரவல்கள் காணப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி இதனை  எளிதில் குணப்படுத்த முடியும். எங்களிடம் 2.75 லட்சம் மருந்துகள் உள்ளன. 

வைரஸுக்கு சிகிச்சையளிக்க மாநிலம் முழுவதும் அதை இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளோம். காய்ச்சலுக்கு 100 சதவீத சிகிச்சை உள்ளது, வைரஸைப் பற்றி பயப்படத் தேவையில்லை, ஆனால் மார்ச் இறுதி வரை பரவுவதைத் தடுக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் மாநிலத்தில் கரோனா பரவல்களும் படிப்படியாக அதிகரிப்பதைக் காணலாம். நேற்று, 119 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. எனவே நாங்கள் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் தினசரி 8,000 முதல் 10,000 வரை கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 பேர் மீது குற்ற வழக்குகள்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT