திரெளபதி முர்மு 
இந்தியா

நேபாள அதிபருடன் குடியரசுத் தலைவர் தொலைபேசியில் உரையாடல்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேபாள அதிபர் ராம் சந்திர பௌதலுடன் இன்று மாலை (2023 மார்ச்-17) தொலை பேசியில் உரையாடினார்.

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேபாள அதிபர் ராம் சந்திர பௌதலுடன் இன்று மாலை தொலை பேசியில் உரையாடினார்.

கேரளாவில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர், நேபாள அதிபராக பதவியேற்றுள்ள பௌடேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையே உள்ள தனித்துவமான உறவுகளை அப்போது இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

பௌடேலின் தலைமையில் இந்தியா- நேபாளம் இடையிலான இரு தரப்பு நல்லுறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT