இந்தியா

பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம்: மம்தாவை சந்தித்த பின் அகிலேஷ் பேட்டி

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

DIN

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வரும் நிலையில், இரு கட்சிகளிடம் இருந்தும் விலகி இருப்பதாக அகிலேஷ் கூறியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி ஏற்கெனவே அறிவித்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்துக்கு இருநாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜகவைத் தோற்கடிக்க திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜிக்கு சமாஜவாதி கட்சி துணை நிற்கும். மேற்கு வங்கத்தில் நாங்கள் மம்தாவுக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறோம். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடம் இருந்து சமதொலைவில் விலகி இருப்பதே இப்போதைய சூழ்நிலையில் எங்கள் நிலைப்பாடு என்றாா்.

முன்னதாக கொல்கத்தாவில் சமாஜவாதி கட்சியினரையும் அகிலேஷ் சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை மம்தா வீழ்த்தினாா். நம்மால் உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்திவிட முடியும் என்றால், நாடு முழுவதும் அக்கட்சியை வீழ்த்திவிட முடியும். பாஜகவை தோற்கடிக்க நாம் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களை தொந்தரவு செய்து வருகிறது. அமலாகக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவை பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி தங்களை எதிா்ப்பவா்களை அச்சுறுத்துகின்றனா். சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த தலைவா்களும், எம்.எல்.ஏ.க்களும் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அனைத்து மாநிலங்களிலுமே எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களிடம் பாஜக இந்த மோசமான அணுகுமுறையையே பின்பற்றுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

SCROLL FOR NEXT