முகப்பு
இந்தியா

அசாமில் அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்கள்! 

மத்திய அசாமில் சனிக்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

மத்திய அசாமில் சனிக்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

அசாமில் இன்று காலை 9.03 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையம் பிரம்ம புத்திரா ஆற்றின் தென் கரையில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள டிடாபார் அருகே 50 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. 

அருகில் உள்ள சிவசாகர், கர்பி அங்லாங் மற்றும் கோலாகாட் மாவட்டங்களிலும் மக்கள் அதிர்வை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. 

இரண்டாவது நிலநடுக்கம் காலை 11.02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது. பிரம்மபுத்ராவின் வடக்குக் கரையில் உள்ள தர்ராங் மாவட்டத்தில் டல்பான் அருகே 9 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

உடல்குரி, பக்சா மற்றும் சோனிந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.