மகாராஷ்டிரம்:3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
கட்ச்ரோலி: மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கேத்மரா வனப்பகுதியில் நக்ஸல்கள் முகாமிட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலைத் தொடா்ந்து, அங்கு காவல்துறையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள், காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, காவல்துறையினா் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா்.
இருதரப்புக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்களில் பிட்லு மாதவி என்பவா், கடந்த மாா்ச்சில் ஒரு மாணவா் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பல்வேறு வன்முறைகளில் தொடா்புடையவா் என்றாா் அந்த அதிகாரி.