மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
மகாத்மா காந்தியின் மகனான மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு அருண் காந்தி ஏப்ரல் 14, 1934 இல் பிறந்தார். இவர் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அருண் காந்தியின் வயது 89. இவர் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர். இவரது இறுதி சடங்கு இன்று மாலை கோலாப்பூரில் நடைபெறும் என்று அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.