இந்தியா

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: தில்லி ஜந்தர் மந்தரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தில்லி ஜந்தர் மந்தரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

DIN

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தில்லி ஜந்தர் மந்தரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவா் பி.டி.உஷா நேற்று(புதன்கிழமை) முன்னணி மல்யுத்த நட்சத்திரங்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

இந்நிலையில், போராட்டம் நடைபெறும் தில்லியின் ஜந்தா் மந்தருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று இரவு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT