இந்தியா

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக தில்லி நோக்கிப் படையெடுக்கும் விவசாயிகள்

மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி விவசாயிகள் உள்பட பலரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தரில் குவிந்து வருகின்றனர். 

DIN

மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி விவசாயிகள் உள்பட பலரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தரில் குவிந்து வருகின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த 12 நாள்களாக இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது தில்லி காவல்துறை உடை அணிந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி விவசாயிகள் உள்பட பலரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தரில் குவிந்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது.

மல்யுத்த வீராங்கனைகளுக்காக தில்லி ஜந்தர் மந்தரில் குவிந்து வரும் விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: நேற்று (மே 3) இரவு எங்களது மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு நடந்த நிகழ்வு எங்களை அவர்களுக்கு ஆதரவாக களமிறங்க செய்துள்ளது. நாட்டுக்காக பதக்கங்கங்களை வென்ற எங்களது மகள்களுக்கு எங்கள் ஆதரவு தேவைப்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். நேற்று அவர்களுக்கு நடந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது. அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என முடிவு செய்துள்ளோம். தில்லி காவல் துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தாக்கப்படும் விடியோவினை பார்த்ததற்குப் பின்பு எங்களால் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. ஒருவர் மல்யுத்தத்தில் சிறந்த வீரர், வீராங்கனையாக வேண்டுமென்றால் கடினமான பயிற்சி வேண்டும். மல்யுத்தத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு உடல் வலிமை மட்டுமில்லாது மன வலிமையும் வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் தங்களது திறமையினை சர்வதேசப் போட்டிகளில் நிரூபித்துள்ளனர். இன்று அவர்கள் ஒருவரால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானோம் எனப் புகாரளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் மல்யுத்த வீராங்கனைகள் மீது இந்தக் காவல் துறை தாக்குதல் நடத்துகிறது என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT