இந்தியா

சரத் பவார் பதவி விலகல்: சுப்ரியா சுலேவிடம் தொலைபேசியில் பேசிய ராகுல் காந்தி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகியதையடுத்து அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல்கள் தெ

DIN

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகியதையடுத்து அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் நேற்று திடீரென அறிவித்தார். மேலும் ஒரு குழுவை நியமித்து அடுத்த தலைவரை தேர்வு செய்யும்படி கூறியுள்ளார்.

இது அவரது கட்சித் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவராக அவர் தொடர வேண்டும் என்று கட்சியினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

பதவி விலகும் முடிவை திரும்பப் பெறுமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் சரத் பவார் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக என்று கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து சரத் பவாரின் மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, கட்சியின் தலைவர் பதவிக்கு சுப்ரியா சுலே தேர்வு செய்யப்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT