தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சரத்பவார் திரும்பப் பெற்றார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சரத் பவார், திடீரென கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இது அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த ராஜிநாமா முடிவை அவர் திரும்பப் பெற வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும் சரத்பவார் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்திருந்தனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சரத்பவார் திரும்பப் பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கட்சியினர் பலரும் தனது ராஜிநாமாவை வாபஸ் வாங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி குழுவும் தனது ராஜிநாமாவை ஏற்க மறுத்ததால் தனது முடிவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.