ஏர் இந்தியா விமானம் 
இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் புகுந்த தேள்: பயணியைக் கடித்ததால் பரபரப்பு!

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை தேள் கடித்ததால் அங்கு அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

DIN

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை தேள் கடித்ததால் அங்கு அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 23-ம் தேதி நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை திடீரென தேள் சுள்ளென கடித்துள்ளது. 

தேள் கடித்த பயணி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் உடனே மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பின்னர் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். 

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 

விமானத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது மிகவும் அரிதானது. இது துரதிர்ஷ்டவசமானது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விதிகளைப் பின்பற்றி விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து தேள் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தை சரியான முறையில் தூய்மைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். 

பயணிகளுக்கு ஏற்பட்ட வேதனை மற்றும் சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

SCROLL FOR NEXT