பிரஷாந்த் கிஷோர் (கோப்புப் படம்) 
இந்தியா

புது எதிர்காலம்: பிரஷாந்த் கிஷோருடன் இணைந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!

பிகாரில் அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தோ்தல் வியூக வகுப்பாளா் பிரஷாந்த் கிஷோருடன் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

DIN

பிகாரில் அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தோ்தல் வியூக வகுப்பாளா் பிரஷாந்த் கிஷோருடன் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர்

சமீபத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றமாட்டேன் என அறிவித்து, புதிய அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பிகாரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்முதல் ஜன் சூரஜ் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார். 

பிகார் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் அவர் மேற்கொண்டுள்ள இந்த பாதயாத்திரையில் (ஓய்வு பெற்றவர்கள் உள்பட) 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர். 
 
மாநில அரசியல் தரம் மோசமடைந்துள்ளதாகவும், மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரஷாந்த் கிஷோரின் இந்த யாத்திரை அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் விதியை மாற்றி புதிய பாதையை அமைக்கும் நோக்கத்தில் பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்: நீதிபதி சந்துரு

தளி தோட்டக்கலை ஆராய்ச்சி, பயிற்சி மையத்தில் பட்டயப் படிப்பு

ராயபுரத்தில் ரூ.12.93 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சேலத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு: தந்தை படுகாயம்

பரையன்தாங்கல் ஊராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள்

SCROLL FOR NEXT