இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அல்ல, இந்திய மகள்களின் போராட்டம்

ஜந்தர்மந்தரில் நடப்பது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மட்டும் அல்ல, இந்திய மகள்களின் போராட்டம் என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். 

DIN


ஜந்தர்மந்தரில் நடப்பது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மட்டும் அல்ல, இந்திய மகள்களின் போராட்டம் என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும்  பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏப்ரல்-23 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து பேசிய பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது மல்யுத்த வீரர்களின் போராட்டம் அல்ல. இந்திய மகள்களின் போராட்டம். இருந்தாலும் போராட்டத்துக்கான தீர்வாக அரசு எந்தவொரு உறுதியான வாக்குறுதியையும் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT