நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 2,109 ஆகப் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,109 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.49 கோடி (4,49,74,909) ஆக உள்ளது.
மேலும், கேரள உள்பட தொற்று பாதித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,31,722 ஆக உளள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21,406 ஆகக் குறைந்துள்ளது.
இதுவரை நாட்டில் 220.66 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.