முகப்பு
இந்தியா

கர்நாடக தேர்தல்: 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவு!

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. களத்தில் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

பிற்பகல் 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.