வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: நடிகர் பிரகாஷ் ராஜ்
வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கர்நாடக தேர்தலில் தனது வாக்கை அளித்த பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கர்நாடக தேர்தலில் தனது வாக்கை அளித்த பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் காலை 7 மணிக்கே வாக்களிப்பதற்காக பெங்களூரு சாந்தி நகரில் உள்ள பள்ளிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வகுப்புவாத அரசியலுக்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும் என்றும், கர்நாடகம் அழகானதாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துகளை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.