இந்தியா

மேற்குவங்க ஆளுநர் மாளிகை அருகே பயங்கர தீ விபத்து

DIN


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகை அருகே இருந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.

ஐந்து அடுக்குகளைக் கொண்ட சரஃப் மாளிகை வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்துநேரிட்டு, அது அந்த கட்டடம் முழுவதும் பரவியது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 55 மீட்டர் ஹைட்ராலிக் ஏணியில் ஏறி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வளாகத்தில் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், குடியிருப்புகள் அமைந்திருந்ததாகவும், இதுவரை விபத்தில் யாரும் பலியானதாகத் தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT