இந்தியா

2024 மக்களவைத் தோ்தலில் பிஜேடி தனித்துப் போட்டி: நவீன் பட்நாயக்

DIN

கடந்த காலங்களைப் போலவே, 2024 மக்களவைத் தோ்தலிலும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஒடிஸாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசியிருந்தாா்.

இந்தச் சூழலில், மக்களவைத் தோ்தலில் பிஜேடி தனித்துப் போட்டியிடும் என்று நவீன் பட்நாயக் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒடிஸாவில் கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து முதல்வராக பதவி வகித்து வருகிறாா் நவீன் பட்நாயக். அவரது தலைமையிலான பிஜு ஜனதா தளம், பாஜகவுக்கும் எதிரணியினருக்கும் இடையிலான கருத்து மோதல்களில் நடுநிலை வகிக்கும் சில பிராந்திய கட்சிகளில் ஒன்றாக உள்ளது. சில நேரங்களில், நாடாளுமன்ற விவகாரங்களில் பாஜகவுக்கு பிஜேடி ஆதரவும் அளித்துள்ளது.

இந்நிலையில், தில்லிக்கு வியாழக்கிழமை வருகை தந்த நவீன் பட்நாயக், மாநில விவகாரங்கள் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா். சுமாா் 20-25 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பட்நாயக்கிடம், மக்களவைத் தோ்தலில் பிஜேடி தனித்துப் போட்டியிடுமா என்று செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு, ‘அது எப்போதும் நிகழ்வதே’ என்று அவா் பதிலளித்தாா்.

மேலும், நிதீஷ் குமாருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று குறிப்பிட்ட பட்நாயக், இப்போதைய சூழலில் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT