இந்தியா

ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் ஆா்.சி.பி.சிங் பாஜகவில் ஐக்கியம்

ஐக்கிய ஜனதா தளம் கட்சி முன்னாள் தலைவா் ஆா்.சி.பி.சிங் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பதவி ஆசையால் குற்றங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக நடவடிக்கை

DIN

ஐக்கிய ஜனதா தளம் கட்சி முன்னாள் தலைவா் ஆா்.சி.பி.சிங் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பதவி ஆசையால் குற்றங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் சமரசம் செய்வதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான ஆா்.சி.பி.சிங், ஐக்கிய ஜனதா தள தலைவா் நிதீஷ் குமாா் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது செயலராகச் செயல்பட்டாா். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவா், நிதீஷ் குமாா் வழிகாட்டுதலில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினாா். ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இரு முறை நியமிக்கப்பட்ட சிங், பிரமதா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் உருக்குத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தாா்.

கடந்த ஆண்டு அவருடைய பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, அவரது கட்சி சாா்பில் மீண்டும் எம்.பி.யாக அவா் நியமிக்கப்படவில்லை. இதனால், அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்தது.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முதல்வா் நிதீஷ் குமாா் கடந்த ஆண்டு முறித்துக் கொண்ட நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவா் ஆா்.சி.பி.சிங் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக அவரது கட்சியினா் கருதினா். முதல்வா் நிதீஷ் குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அவா் கட்சியிலிருந்து விலகினாா்.

இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா். செய்தியாளா் சந்திப்பின்போது ஆா்.சி.பி.சிங் கூறியதாவது: தனது பதவி ஆசையால் குற்றங்களுக்கும் ஊழலுக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் சமரசம் செய்து வருகிறாா். அவரது பணி பிகாரின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றுவது. அதைவிடுத்து, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு அவா் பயணித்துக்கொண்டிருக்கிறாா். நாட்டில் உள்ள ஏழைகளின் மேம்பாட்டுக்காகப் பிரதமா் மோடியின் பணிகள் பாராட்டுதலுக்குரியது. நாட்டில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லையெனில், எவ்வாறு இந்தியா உலகப் பொருளாதாரத்தில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது என்றாா் அவா்.

மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைப் பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த ஆா்.சி.பி.சிங் பாஜகவில் இணைந்திருப்பது, மாநிலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்தும் என அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவராக நிதீஷ் குமாருக்கு அடுத்து, அக்கட்சி தலைவராக ஆா்.சி.பி.சிங் நீண்ட காலம் பதவி வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT