இந்தியா

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் ரூ.548 கோடி நிதி திரட்ட திட்டம்

பொதுத் துறையைச் சேர்ந்த, ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் பல்வேறு வழிகளில் ரூ.548 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

DIN

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் பல்வேறு வழிகளில் ரூ.548 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு அடுத்த வாரம் மே 19, 2023 அன்று நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் நிறுவனத்தின் தலா ரூ.5 முகமதிப்பு கொண்ட 9,69,76,680 ஈக்விட்டி பங்குகளை வெளியிடுவதன் மூலம் நிதிதிரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கான பரிந்துரையை அதன் வாரியம் பரிசீலிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.500 கோடி வரை பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வெளியிடவும், ஒதுக்கவும் பங்குதாரர்களின் ஒப்புதலை வாரியம் கோரும்.

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் ஆலைகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT