இந்தியா

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!

DIN

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சூரத் கீழமை நீதிமன்ற நீதிபதி ஹதிராஷ் ஹெச். வர்மா உத்தரவிட்டார். 

இதையடுத்து வர்மா, ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

வர்மா உள்ளிட்ட 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

இதில், சூரத் நீதிபதி வர்மா உள்பட குஜராத்தில் 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது, மேலும், பழைய பதவியிலேயே நீதிபதிகள் தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் அதை ஏற்றுக்கொண்ட மாநில அரசின் ஒப்புதலும் சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறுவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT