முகப்பு
இந்தியா

ஜனநாயகம் வென்றது: கர்நாடக தேர்தல் குறித்து ராகுல் 

ஜனநாயகம் வென்றது என்று, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருப்பது குறித்து கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:


புது தில்லி: ஜனநாயகம் வென்றது என்று, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருப்பது குறித்து கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், புது தில்லியில் இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகத்தில் ஏழை மக்களின் சக்தி வெற்றிபெற்றுள்ளது. கர்நாடக மக்களுக்கு இதயத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக தேர்தலில் ஒரு பக்கம், முதலாளித்துவம், அதிகாரத்துவத்தை மையமாக வைத்திருக்கும் கட்சியும், மற்றொரு பக்கம் கர்நாடக மாநிலத்தின் ஏழை மக்களின் பலமும் போட்டியிட்டது. இதில், முதலாளித்துவம், அதிகாரத்துவத்தை மையமாக வைத்து ஆட்சி செய்தவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற ராகுல் காந்தி கூறினார்.

கர்நாடகத்தில் ஜனநாயகம் வென்றது என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.
 

முழு கட்டுரையைப் படிக்க →