முகப்பு
இந்தியா

கர்நாடக தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் பாஜக தலைவர்கள்

வாக்குகள் எண்ணத் தொடங்கியவுடன் காலை 10 மணிக்கு தோ்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறாா்கள் என்ற போக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:


பெங்களூரு: கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் மாநிலத்தில் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 36 மையங்களில் சனிக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்குகள் எண்ணத் தொடங்கியவுடன் காலை 10 மணிக்கு தோ்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறாா்கள் என்ற போக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது.

கர்நாடக தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகித்து, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.

பல தொகுதிகளில் பாஜக முன்னணி தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். 

அதில் முக்கியமானவர் சி.டி. ரவி. பாஜக பொதுச செயலாளரும், எம்எல்ஏவுமான சி.டி. ரவி, சிக்மக்லூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி. தம்மையா முன்னிலை வகிக்கிறார். 

ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில், பாஜக வேட்பாளர்கள் ஐந்து தொகுதிகளில் பின்னடைவை சந்தித்திருப்பது, முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவுக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பாஜக அமைச்சர் வி. சோமன்னா, சாம்ராஜ்நகர் தொகுதியில் 2341 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.